Saturday, April 9, 2016

சாலைகளில் கேபிள் பதிப்பதில் தமிழக அரசுக்கு பல நூறு கோடி இழப்பீடு

கோவை உட்பட தமிழக முழுவதிலும் சாலைகளில் கேபிள் பதிப்பதற்கான வாடகைத் தொகையை உயர்த்தாத காரணத்தால், தமிழக அரசுக்கு பல நூறு கோடி ருபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கோவை மாநகரில் சாலைகளில் கேபிள் பதிக்க எத்தனை நிறுவனங்களுக்கு எத்தனை கீ.மீ.தூரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு வாடகை என்பன போன்ற பல்வேறு விபரங்களைப் பெற்றுள்ளேன்.

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அரசாணைப்படி (எண்.7, தேதி: 12.02.2001) சென்னையில் சாலையில் கேபிள் பதிப்பதற்கு ஒரு கீ.மீ.தூரத்துக்கு ஆண்டுக்கு 9,400 ருபாயும், கோவை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களுக்கு 6,300 ருபாயும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணத்தை 3 ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2001ல் வெளியிடப்பட்ட நிலையில் இன்று வரை (17.08.2014) சென்னை உள்ளிட்ட எந்த நகரங்களிலும் வாடகை உயர்த்தப்படவே இல்லை. இதனால் பல நூறு கோடி ருபாய் தமிழக அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.



No comments:

Post a Comment