Saturday, April 30, 2016

அட்டப்பாடி அணை ஆபத்து

கோவை: முல்லைப் பெரியாரில் அணை கட்ட முயன்று வைகோ அவர்களின் தொடர் போராட்டத்தால் மூக்கறுபட்டுப் போன கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி என்ற இடத்தில் அணை கட்ட முயற்சி செய்தது, 

அப்படிக் கட்டினால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்சனை வரும் என்பதைக் கருத்தில் கொண்டு கழகத் தோழர்களின் உதவியோடு பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அட்டப்பாடிக்கே சென்று ஆர்ப்பாட்டம் செய்தோம், இதன் மூலம் கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தி வைத்துள்ளோம்.


வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்றும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, கோவை மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு அனுமதி கோரி மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு எழுதிய கடிதத்தை நிராகரிக்குமாறும் அதற்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளரிடம் எனது மற்றும் மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில் ஆகியோர் தலைமையில் வெள்ளலூர் பொதுமக்கள் இணைந்து மனு அளித்தோம் (22.01.2013). குறிச்சி நகர செயலாளர் செல்வராஜ், வெள்ளலூர் நகர செயலாளர் டேனியல் உடன் உள்ளனர்


தமிழின உரிமை காக்க வெலிங்கடன் இராணுவ முகாம் முற்றுகை

நீலகிரி: சிங்கள இனவெறி அதிகாரிகளுக்கு இந்திய அரசு பயிற்சி தமிழகத்தில் பயிற்சி அளிக்காது என்று அப்போதைய மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதி அளித்த பிறகும், குன்னூரில் உள்ள வெலிங்கடன் இராணுவ முகாமில் அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்படுவதை அறிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எனது தலைமையில் கழகத் தோழர்களுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் இந்திய மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினோம். நீண்ட போராட்டத்துக்குப் பின் காவலர்களால் கைது செய்யப்பட்டோம்.





Friday, April 22, 2016

வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு பூட்டுப்போடும் போராட்டம்

கோவை புறநகர் மாவட்ட மதிமுக சார்பில் வெள்ளலூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கிற்கு பூட்டு போடும் போராட்டம் அக்டோபர் 14ம் தேதி 2012ல் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்போதைய புறநகர் மாவட்டச் செயலாளராகிய நான், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், ஆடிட்டர் அர்ஜுனராஜ் ஆகியோர் தலைமையில் 50 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வெள்ளலூர் ரோடு - ஜி.டி. டேங்க் சந்திப்பில் இருந்து 1 கீ.மீ.தூரம் ஊர்வலமாக வந்து குப்பைக்கிடங்கின் பிரதான வாயிலுக்கு பூட்டு போட முயன்றோம்.

ஆனால் அங்கு பாதுகாப்புக்கு  நின்ற காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தரையில் அமர்ந்து எங்களது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தோம். குப்பைக் கிடங்கை முழுமையாக இங்கிருந்து அப்புறப்படுத்தக் கோரி கோசங்கள் எழுப்பினோம். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் தடையை மீறி குப்பைக் கிடங்கை நோக்கி செல்ல முயன்றோம். ஆனால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி எங்களை கைது செய்தனர்.

இது குறித்து கருத்து தெரிவிக்கையில் "ஊருக்கு அப்பால் பல கீ.மீ.தொலைவில்தான் குப்பைக் கிடங்கு இருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும். இல்லையேல், மக்களைத் திரட்டி இதுபோன்ற தொடர் போராட்டங்களை நடத்துவோம்" என்றேன்.



அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தக் கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்

மதுக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி மதிமுக சார்பாக கையெழுத்து இயக்கம் வே.ஈசுவரன் தலைமையில் தொடங்கப்பட்டது

மதுக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மிகவும் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருகின்றனர். பிரசவம் மற்றும் ஸ்கேன் எடுக்கவும் மதுக்கரை சுகாதார நிலையத்திற்கே சுற்றுப்பகுதியில் உள்ள அனைவரும் அனுப்பப்படுகின்றனர். ஆனாலும் கூட தற்போது தனியாக மகப்பேறு மருத்துவ இல்லை. சரியான அறுவை சிகிச்சைகள் இங்கு நடைபெற வாய்ப்பு இல்லை.

கோவையின் தெற்குப் பகுதியில் எங்குமே அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்படவில்லை. மிகவும் அதிக நோயாளிகள் வருகின்ற மதுக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக உடனடியாக மாற்ற வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என்ற மனுவோடு மதுக்கரைப் பகுதியில் உள்ள மக்களிடம் கையெழுத்துப் பெற்று தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



அதேபோல, மயிலேரிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி மதிமுக சார்பாக கையெழுத்து இயக்கம் வே.ஈசுவரன் தலைமையில் தொடங்கப்பட்டு அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டது.






Wednesday, April 20, 2016

போத்தனூர் அரசு மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

கோவை: போத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி 16.12.2015 அன்று மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில்;

15.12.2015 அன்று பிரசவத்தின் போது ஒரு குழந்தை இறந்துள்ளது. இது மிகவும் வருத்தப்படக்கூடிய சம்பவம் ஆகும். இந்த சுகாதார நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. 

போத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையம்
  • 24 மணிநேரமும் மருத்துவர் உள்ள வகையில் மேம்படுத்த வேண்டும்
  • 30 படுக்கை வசதிகள் கொண்ட சுகாதார நிலையமாக மாற்றப்பட வேண்டும்
  • மகப்பேறு மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும்
  • பிரசவத்தின் அறுவை சிகிச்சையும் இங்கேயே செய்து கொள்ளும் வகையில் மேம்படுத்த வேண்டும்
  • சுந்தராபுரம் பகுதியில் புதிதாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட வேண்டும்
  • தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்



Tuesday, April 19, 2016

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை துவக்க மதிமுக வலியுறுத்தல்


இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மருத்துவமனையை கோவையில் அமைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை 13.06.2014 அன்று வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 15.07.2014 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு AIIMS மருத்துவமனை தொடங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தக் கோரிக்கை வைக்கப்பட்டது.








மருத்துவமனையின் இடத்தில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு

கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையின் இடத்தில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆணையாளருக்குக் கடிதம் 16.11.2013 அன்று எழுதப்பட்டது. அதைத் தொடர்ந்து எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது "சென்னையில் தலைமைச் செயலகத்தை மாற்றி மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை மாநகராட்சியில் மருத்துவமனை வளாகம் வணிக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், தனி நபர்களுக்கும், மாநகராட்சிக்கும் மட்டுமே பலன் கிடைக்கும், மக்களுக்கு எந்த பலனும் இல்லை. மக்களின் மருத்துவ தேவையைக் கருத்தில் கொண்டு இனிமேல் மருத்துவமனை வளாகத்தில் வணிக வளாகம் கட்டுவதை கைவிட வேண்டும்"





Monday, April 18, 2016

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டி - வைகோவிற்கு நன்றி

வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் வைகோ அவர்களுக்கு நன்றி. கோவை, குறிச்சி, மதுக்கரை, கிணத்துகடவு, சுந்தராபுரம் உள்ளிட்ட தொகுதி மக்கள் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தாமாக கூட்டணி சார்பில் போட்டியிடும் எனக்கு ஆதரவளித்து பம்பரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஆசி பெற்றபோது (16.04.2016)


கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அவர்களும், சிங்காநல்லூர் வேட்பாளர் திரு.ஆடிட்டர் அர்ஜுனராஜ் அவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சிங்காநல்லூர் வேட்பாளர் அவர்களுக்கு நான் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டேன்.


தொண்டாமுத்தூர் தே.மு.தி.க திரு.பாண்டியண் அவர்கள் வாழ்தியபோது


கோவை மாநராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு.கிருஷ்ணசாமி, திரு.அருள், திரு.குணா, திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். 














ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியருக்கு மனு

மதுக்கரை ஒன்றியம் திருமலையாம்பாளையத்தில் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் கம்பெனி காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது (13.01.2016)


Tuesday, April 12, 2016

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி சார் - ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி பலமுறை வேண்டுகோள் விடுத்தும், மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் பாராமுகமாக இருந்ததால் 20.11.2012 அன்று கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ஈசுவரன் தலைமையில் மறுமலர்ச்சி திமுக சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு கைதாகினர்





வாளையாறு முதல் மதுக்கரை வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மறுமலர்ச்சி திமுக சார்பில் 29.09.2013 அன்று எனது தலைமையில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடைப்பயணத்தில் கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில் உள்ளிட்ட ஏரளாமான கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 



Monday, April 11, 2016

கோவை - பொள்ளாச்சி அகல இரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரி மதிமுக நடைபயணம்

கோவை - பொள்ளாச்சி அகல இரயில் பாதை திட்டத்தை 2012ம் ஆண்டே முடிக்கக் கோரி கிணத்துக்கடவு முதல் போத்தனூர் வரை அப்போதைய கோவை புறநகர் மாவட்ட செயலாளரான எனது தலைமையில் நடைபயணம் நடைபெற்றது (08-04-2012). 

ஆரம்பத்திலேயே நமக்கும் காவல்துறைக்கும் மோதல் ஏற்பட்டது. இரண்டு இடங்களில் நம்மை மறிக்க முயன்று தோற்றுப் போய் வேறு வழியின்று பின்னர் பாதுகாப்பு வழங்கினர். 

நடைபயணத்தை மறுமலர்ச்சி திமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் துவக்கி வைத்தார். மக்களுக்கான போராட்டத்தில் நாம் முன்னிற்போம் என்பது மீண்டும் நிரூபணம் செய்யப்பட்டது. 

போத்தனூர் ஆய்வாளர் கழகத்தை பற்றியும், நம்மைப் பற்றியும் உயர்வாக பேசிய போது, இதற்கெல்லாம் காரணமான இந்த அளவுக்கு நம்மை மதிக்கச் செய்த தலைவர் வைகோ அவர்களுக்கு நன்றி.




Saturday, April 9, 2016

சாலைகளில் கேபிள் பதிப்பதில் தமிழக அரசுக்கு பல நூறு கோடி இழப்பீடு

கோவை உட்பட தமிழக முழுவதிலும் சாலைகளில் கேபிள் பதிப்பதற்கான வாடகைத் தொகையை உயர்த்தாத காரணத்தால், தமிழக அரசுக்கு பல நூறு கோடி ருபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கோவை மாநகரில் சாலைகளில் கேபிள் பதிக்க எத்தனை நிறுவனங்களுக்கு எத்தனை கீ.மீ.தூரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு வாடகை என்பன போன்ற பல்வேறு விபரங்களைப் பெற்றுள்ளேன்.

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அரசாணைப்படி (எண்.7, தேதி: 12.02.2001) சென்னையில் சாலையில் கேபிள் பதிப்பதற்கு ஒரு கீ.மீ.தூரத்துக்கு ஆண்டுக்கு 9,400 ருபாயும், கோவை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களுக்கு 6,300 ருபாயும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணத்தை 3 ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2001ல் வெளியிடப்பட்ட நிலையில் இன்று வரை (17.08.2014) சென்னை உள்ளிட்ட எந்த நகரங்களிலும் வாடகை உயர்த்தப்படவே இல்லை. இதனால் பல நூறு கோடி ருபாய் தமிழக அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.



கோவை அண்ணா பல்கலையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி தந்தி அனுப்பும் போராட்டம்

கோவை அண்ணா பல்கலைக்கு என உள்ள இருநூறு (200) கோடி ரூபாயை கொண்டு, கோவை மண்டல அண்ணா ல்கலை பிரிவை உலகத்தரத்திலான உள் கட்டமைப்புகளை உருவாக்கக்கோரி தமிழக முதல்வருக்கு எனது தலைமையில் (07.08.2012) தந்தி அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




கோவை வனக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு

கோவை: நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் கோவை வனக்கல்லூரி மாணவர்களை 25.07.2014 அன்று நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம்.

ஏறத்தாழ 51 மாணவிகள் உட்பட நூற்று ஐம்பத்தொரு மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர், கழிவறை என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் துண்டிக்கப்பட்ட பிறகும் மாணவத் தோழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். உடனடியாக இதை மாவட்ட வருவாய் அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென் றேன். போராடும் மாணவர்களுக்கு உடனடியாக அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டுமென்று வலியுறுத்த, அதைச் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார் வருவாய் அலுவலர்

தணிக்கைக்குழு உறுப்பினர் டி.டி.ஆர், பொருளாளர் பி.என். ஆர், நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் செல்வகுமார், மாநில மாணவரணித் துணைச் செயலாளர் உமாபதி, கோவை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இள.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்தனர்.



கோவையில் உலகத்தர பல்கலைகழகம் அமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

கோவைக்கு 2008ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட உலகத்தர பல்கலைகழகம் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து 2011 ஆகஸ்ட் மாதம் கோவை மாவட்ட திமு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் அடுத்த கட்டமாக முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடைபெற்றது

ஆயினும் இரண்டு அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பல்கலைகழகம் கோவைக்கு வருவதன் மூலம் எண்ணற்ற மாணவ தோழர்கள் பயன் பெறுவர். ஆகவே மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாக கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் முன்பாக மாணவர்களிடம் இதை குறித்து ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமும், கையெழுத்து இயக்கமும் நடத்த முடிவு செய்யப்பட்டது

கோவை ஈச்சனாரி கற்பகம் கல்லூரி முன்பு நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தின் போது;



கோவை: சத்துணவு மையங்களுக்கு, சமையல் காஸ் இணைப்பு வழங்கி நவீனப்படுத்தினாலும், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் விறகு அடுப்பு கலாச்சாரமே தொடர்கிறது. இதனால், சத்துணவு ஊழியர்களின் சுகாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழகத்திலுள்ள சத்துணவு மையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுதல், பழுது பார்த்தல், குழந்தைகள் எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில் கழிப்பறைகள் அமைத்தல், மின் இணைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் என பணிகள் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படுகிறது.

சத்துணவு மையங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலைப் பெற்றுள்ளோம். இதனடிப்படையில் பார்த்தால், சத்துணவுக் கூடங்களுக்கு காஸ் இணைப்பு வழங்கி மேம்படுத்த திட்டத்தைச் செயல்படுத்தும் அரசு, அதனைக் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபடவேண்டும். பல பகுதிகளில் காஸ் இணைப்புகள் பயன்படுத்தாமல் முடக்கப்பட்டு, விறகு அடுப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தமிழக அரசின் நிதி சுமார் ருபாய் 100 கோடி வரை வீணாகிறது. அரசின் நிதியை வீணாக்காமல், சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.






ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் படுமோசம்

கோவை அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் விடுதிகளில் பராமரிப்பு மற்றும் உணவு சரியில்லை என மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திமுக ஆதரவளிக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;

தமிழகத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் விடுதி மூலம் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் அவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவளிக்கப்படுவதில்லை. 

கடந்த 2014 - 2015 ம் நிதிநிலை ஆண்டில் தமிழக அரசு ஆதி திராவிட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் மீதமுள்ள ருபாய் 41 கோடி எங்கே போனது என்று தெரியவில்லை. இது மட்டுமல்லாமல், விடுதிகள் கட்ட வெளியிடப்பட்ட அறிவிப்பும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 




Tuesday, April 5, 2016

மதிமுகவின் தொடர் முயற்சியால் மதுக்கரை மார்க்கெட் அரசு தொடக்கபள்ளிக்கு விடிவு

மதுக்கரை மார்க்கெட்டில் அமைந்துள்ள 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு தொடக்கபள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும், இடியும் நிலையில் உள்ள மேற்கூரைகளை சீரமைக்கக் கோரியும் மறுமலர்ச்சி திமுக தொடர்ச்சியாக போராட்டம், தமிழகக் கல்வித்துறை அமைச்சருக்குக் கடிதம், மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கடிதம்  என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதன் விளைவாக சுமார் ஓராண்டுக்குப் பின் இப்போது கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மறுமலர்ச்சி திமுகவின் தொடர்ச்சியான மக்கள் நலப் போராட்டங்கள் கண்டிப்பாக வெற்றி பெரும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.