Tuesday, March 8, 2016

மேற்குத்தொடர்ச்சி மலையை பாதுக்காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி மறுமலர்ச்சி திமுக பிரச்சாரப் பயணம்


கோவை மாவட்டத்தின் மிக முக்கிய நீராதாரம் மேற்குத்தொடர்ச்சி மலைதான். கோவையின் தட்ப வெட்ப நிலையம், பல்லுயிர் சூழலும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுக்காப்பதில்தான் அடங்கியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளினாலும், அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டுவதாலும் மலையின் சூழல் பாதிப்படைந்து வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. 

எனவே மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தி 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை மறுமலர்ச்சி திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈசுவரன் தலைமையில், கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில் கோவைப்புதூர் அருகிலுள்ள அறிவொளி நகரில் இருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.


பிரச்சாரம் மதுக்கரை குவாரி ஆபிஸ், மதுக்கரை காவல் நிலையம், மரப்பாலம், எட்டிமடை, சாவடிப்புதூர், காவடி கிழக்கு மற்றும் மேற்கு, நவக்கரை ஆகிய பகுதிகளில் நடைபெற்று இறுதியில் வாளையாரில் முடிவு பெற்றது. இந்த பிரச்சாரத்தை மதுக்கரை ஒன்றியச் செயலாளர் கு.க.வெள்ளியங்கிரி ஒருங்கிணைத்தார்.

மேற்குத்தொடர்ச்சி மலை எதிர்கால தலைமுறையின் சொத்து, 
இதனை பாதுகாப்பது இந்த தலைமுறையின் கடமை



No comments:

Post a Comment