Monday, March 28, 2016

பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தில் சேர்க்க மதிமுக வலியுறுத்தல்

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டங்களை ஆய்வு செய்து வருகிற தேசிய நீர்வள மேம்பாட்டு அமைப்பு (NWDA) தமிழகத்திற்கு பென்னாறு - பாலாறு - காவிரி இணைப்புத் திட்டம், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் மற்றும் பம்பா - அச்சங்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டம் ஆகியற்றை பட்டியலிட்டுள்ளது. 

இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு இதனால் பயனில்லை. கோவை, திருப்பூர் மாவட்டங்கள் பயன்பெற பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். கோவை மாவட்டத்தின் எதிர்கால நலன் கருதி இத்திட்டத்தை தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தில் சேர்த்து உடனடியாக DPR தயாரிக்க மத்திய அரசிற்கும் தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்புக்கும் கோரிக்கை வைக்க வலியுறுத்தி தமிழக பொதுப்பணித் துறை அமைச்சருக்கு மதிமுக சார்பில் 07.08.2014 அன்று கடிதம் எழுதப்பட்டது.






பொள்ளாச்சியில் இரயில்வே முன்பதிவு விண்ணப்பங்களை தமிழில் வழங்கக் கோரிக்கை

பொள்ளாச்சியில் வழங்கப்படுகின்ற இரயில் முன்பதிவு விண்ணப்பங்களில் தமிழில் இல்லாமல் ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே உள்ளன. இது தமிழகத்தின் பறிக்கின்ற செயல். உடனடியாக தெற்கு இரயில்வே நிர்வாகம் பாலக்காடு இரயில் கோட்ட நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு தமிழில் விண்ணப்பங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 22.08.2014 அன்று தெற்கு இரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.



Sunday, March 27, 2016

கிணத்துக்கடவு குளிர்பதனக் கிடங்கை திறக்க வலியுறுத்தி கோரிக்கை

கோவை: மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மூன்றான்று இழுபறிக்குப் பின் கட்டி முடிக்கப்பட்ட குளிர்பதனக் கிடங்கை இன்னும் பயன்பாட்டுக்கு திறந்துவிடாமல் பூட்டு போட்டிருப்பதன் காரணம் என்ன. இனிமேலும் தாமதப்படுத்தாமல் விவசாயிகளின் நலன் கருதி உடனே குளிர்பதனக் கிடங்கை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயத்துறை அமைச்சருக்கு 24.04.2015 அன்று கடிதம் எழுதப்பட்டது.




கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பயனாளிகள் காத்திருக்க தேவையான வசதியான செய்து தரக் கோரிக்கை

கோவையில் சித்ரா அருகில் செயல்பட்டு வரும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வருபவர்கள் மட்டுமே அலுவலகத்துக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுடன் வரும் பெற்றோர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, ஆகையால் அவர்கள் அலுவலகத்தின் வெளியே காத்திருக்க வேண்டியுள்ளது, பல மணிநேரங்களும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படிக் காத்திருப்பவர்கள் நிழலில் ஒதுங்கவோ, அல்லது கழிப்பிட வசதியோ எதுவும் செய்து தரப்படவில்லை. ஆகவே உடனடியாக கழிப்பிட வசதியுடன் கூடிய  வரவேற்பு அறை அமைத்துத் தர வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் 24.04.2015 அன்று எழுதப்பட்டது. 


அதே நாளில் தற்காலிக ஏற்பாட்டாக நிழற்குடை அமைத்துத் தர வலியுறுத்தி கோவை மாநகராட்சி மேயருக்கு கடிதம் எழுதப்பட்டது.


மேலும், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்ட தேவையான நிலம் ஒதுக்கித் தர வலியுறுத்தி தமிழகத் தலைமைச் செயலருக்கு 24.04.2015 அன்று கடிதம் எழுதப்பட்டது.




Saturday, March 26, 2016

சிறுவாணி அணைக்கு தண்ணீரைக் கொண்டுவரும் குழாய்ப் பாதையைத் தடுக்கக் கூடாது எனக் கடிதம்

சிறுவாணி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் பழைய குழாய்ப் பாதையில் உள்ள வால்வுகளை அடைத்து கோவைக்கு வரும் தண்ணீரைக் குறைப்பதனால் கோவை மாவட்டமே தண்ணீரின்றித் தவிக்கும் நிலைக்கு வந்துவிடும், ஆகையால் பழைய குழாய்ப் பாதையில் அமைந்துள்ள வால்வை அடைக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி பாலக்காடு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டது. 

மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறைக்கு நிதிநிலை அறிக்கையில் சொன்னதும், உண்மையில் செய்ததும்

தமிழக அரசின் 2014 - 2015 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு முக்கிய துறையான மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை சிறப்பாகச் செயல்பட அறிவிக்கப்பட்ட திட்டங்களும், உண்மையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன என்பன பற்றிய விவரங்கள் தகவல் அறியும் உரிசட்டத்தின் கீழ் பெறப்பட்டு மக்களின் பார்வைக்கு மறுமலர்ச்சி திமுகவால் கொண்டு வரப்பட்டது.

Monday, March 21, 2016

காவல்துறைக்கு நிதிநிலை அறிக்கையில் சொன்னதும், உண்மையில் செய்ததும்


தமிழக அரசின் 2014 - 2015 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் முக்கிய துறையும், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறையுமான காவல்துறை சிறப்பாகச் செயல்பட அறிவிக்கப்பட்ட திட்டங்களும், உண்மையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன என்பன பற்றிய விவரங்கள் தகவல் அறியும் உரிசட்டத்தின் கீழ் பெறப்பட்டு மக்களின் பார்வைக்கு மறுமலர்ச்சி திமுகவின் மாநில இளைஞரணிச் செயலாளர் வே. ஈசுவரன் கொண்டு வந்தார்.



Monday, March 14, 2016

பொதுமக்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி

யானை - மனிதர்கள் மோதலைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மறுமலர்ச்சி திமுக கோவை மதுக்கரையில் 28.03.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தியது. இந்தப் பிரச்சாரப் பேரணிக்கு அப்போதைய கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் தலைமை தாங்கினார். அப்போதைய மதுக்கரை மதிமுக பொறுப்பாளர் வே.ஈசுவரன் பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பேரணி மதுக்கரை, எட்டிமடை, சாவடி, வாளையார் ஆகிய இடங்களில் நடைபெற்றது.




27.04.2012 யானை - மனித மோதலால் உயிரிழக்கும் நபரின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரிக்கை


Thursday, March 10, 2016

மதுவிலக்கை வலியுறுத்தி கோவையில் மதிமுக நடத்திய மராத்தான் போட்டி


தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இளையதலைமுறையினர் கலந்து கொண்ட மராத்தான் போட்டிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டி நவம்பர் 23ம் தேதி ஞாயிறன்று காலை 6.30 மணிக்கு சுந்தராபுரத்தில் உள்ள உழவர் சந்தையில் கழகப் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. போட்டி மதுக்கரை மார்கெட்டில் முடிவுற்றது. இந்த ஓட்டத்தில் 20,000 மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கெடுத்தவர்களுடன் வைகோ அவர்களும் சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு ஓடி கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினார். போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வைகோ அவர்களால் வழங்கப்பட்டது. 

ஓடுவோம்! நடப்போம்!! மதுவை விரட்டுவோம்!!!


Tuesday, March 8, 2016

மேற்குத்தொடர்ச்சி மலையை பாதுக்காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி மறுமலர்ச்சி திமுக பிரச்சாரப் பயணம்


கோவை மாவட்டத்தின் மிக முக்கிய நீராதாரம் மேற்குத்தொடர்ச்சி மலைதான். கோவையின் தட்ப வெட்ப நிலையம், பல்லுயிர் சூழலும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுக்காப்பதில்தான் அடங்கியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளினாலும், அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டுவதாலும் மலையின் சூழல் பாதிப்படைந்து வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. 

எனவே மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தி 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை மறுமலர்ச்சி திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈசுவரன் தலைமையில், கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில் கோவைப்புதூர் அருகிலுள்ள அறிவொளி நகரில் இருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.


பிரச்சாரம் மதுக்கரை குவாரி ஆபிஸ், மதுக்கரை காவல் நிலையம், மரப்பாலம், எட்டிமடை, சாவடிப்புதூர், காவடி கிழக்கு மற்றும் மேற்கு, நவக்கரை ஆகிய பகுதிகளில் நடைபெற்று இறுதியில் வாளையாரில் முடிவு பெற்றது. இந்த பிரச்சாரத்தை மதுக்கரை ஒன்றியச் செயலாளர் கு.க.வெள்ளியங்கிரி ஒருங்கிணைத்தார்.

மேற்குத்தொடர்ச்சி மலை எதிர்கால தலைமுறையின் சொத்து, 
இதனை பாதுகாப்பது இந்த தலைமுறையின் கடமை



Saturday, March 5, 2016

09.07.2013 அன்று கோவை மாவட்டத்திற்கு அறிவித்த வளர்ச்சிப்பணிகளை விரைந்து நிறைவேற்றக் கோரி தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம்